;
Athirady Tamil News

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்: எத்தனை லட்சம் தெரியுமா!

0

உலகிலேயே மிகப்பெரிய பர்கின் விலையானது உணவுப்பிரியர்களை வியப்படைய செய்துள்ளது.

டச்சு பகுதியை சேர்ந்த டி டால்டன்ஸ் என்று பெயரிடப்பட்ட உணவகத்தின் உரிமையாளரான ராபர்ட் ஜான் டி வீன் என்பவர் ஒரு விலையுயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார்.

இதன் ஒரு பீஸ் சுமார் 5,000 யூரோக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 4.5 லட்சம் ஆகும்.

விலை உயர்ந்த பர்கர்
இந்த பர்கருக்கு “தி கோல்டன் பாய்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த பர்கர் தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி, கேவியர் மற்றும் பல சத்தான விலையுயர்ந்த உணவு பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த உணவுப் பொருட்களின் சமையல் பட்டியலில் தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இவர் தனது சமூக வலைத்தளபக்கங்களில், இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.

உருவான கதை
மேலும், இந்த பர்கர் உருவாக்கத்தின் பின்னால், ஒரு நல்ல காரணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, கொரோனா தொற்று காலத்தில் இந்த யோசனை தோன்றியதாகவும், இது ஒரு சாதனையை உருவாக்குவது மட்டுமல்லாமல், நெதர்லாந்தில் உள்ள வறுமையின் கவனத்தை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

கோல்டன் பாய்” இன் முதல் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானத்தில் வசதியற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பர்கர், சமீபத்தில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நம்பமுடியாத உயர் விலை, சுவைகள் மற்றும் பொருட்களின் சிறப்பு கலவை காரணமாக அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ள இந்த பர்கர் விவாதப்பொருளாகமாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.