விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்ற நபர்..ஹொட்டல் பால்கனியில் இருந்து குதித்ததால் நேர்ந்த துயரம்
கொலம்பியாவில் 41 வயது நபர் ஒருவர் ஹொட்டல் பால்கனியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
விடுமுறைக்காக சென்ற நபர்
அமெரிக்காவின் Ohioவைச் சேர்ந்த 41 வயது நபர் ஜேம்ஸ் பெர்ரி. இவர் கொலம்பியாவுக்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்.
அங்கு மெடலினில் உள்ள ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் தனது மூன்றாவது மாடி அறையின் பால்கனியில் இருந்து ஜேம்ஸ் பெர்ரி கீழே குதித்துள்ளார்.
அவர் விழுந்த சத்தம் கேட்டு ஹொட்டல் ஊழியர்கள் வெளியே வந்து பார்த்தபோது, ஜேம்ஸ் பெர்ரி தோட்டத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.
காயத்தின் விளைவாக இறப்பு
இதனையடுத்து அவர் மெடலின் வெஸ்ட் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நள்ளிரவுக்குப் பிறகு காயத்தின் விளைவாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் பெர்ரி தன் உயிரை மாய்த்துக்கொண்டதை உறுதிப்படுத்தினார்.