;
Athirady Tamil News

டொனால்டு டிரம்ப் மீது அதிர்ச்சி தாக்குதல்! அமெரிக்காவில் பரபரப்பு (வீடியோ)

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் டொனால்டு டிரம்ப் (Donald Trump) தனது ஆதரவாளர்களிடம் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மீது தாக்குதல் நடந்தது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட நிலையில், டிரம்ப் விரைவாக கீழே குனிந்தார்.

மேடைக்கு வந்த பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்துகொள்ள, முகத்தில் ரத்தம் வழிய டிரம்ப் தனது கையை உயர்த்தினார்.

மேடைக்கு வந்த பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்துகொள்ள, முகத்தில் ரத்தம் வழிய டிரம்ப் தனது கையை உயர்த்தினார்.

பின்னர் அவர் அங்கிருந்து பாதுகாவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.