கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு நடத்தப்பட்ட விசேட மருத்துவ முகாம்
கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன்கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தியது.
இதில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.
பாத யாத்திரிகர்களின் நலன்
கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன்கருதி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனும் தொனிப்பொருளில் உகந்தை மற்றும் குமண போன்ற இடங்களில் கடந்த (01) திங்கட்கிழமை முதல் (11) வியாழக்கிழமை வரை 11 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன.
இம்மருத்துவ முகாமில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதுடன் தங்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்.
மேலும்.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர், சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.