;
Athirady Tamil News

சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

0

நடுரோட்டில் ஆட்டை வெட்டி கொண்டாடியதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆடு வெட்டுவது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் விதமாக திமுகவினர் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் வெட்டினர்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன்தாஸ் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றம் கண்டனம்
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுமில்லாது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.

எனவே அரசியல் கட்சி தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் ரோட்டில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமர்வு, இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது என காட்டமாக தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.