கனடாவில் அதிகரிக்கும் நோய்த் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் (Canada) ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன்மாதம் (15)ஆம் திகதி வரையில் மாகாணத்தில் 67 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை ஒன்றாரியோ பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகாத போதிலும், தற்பொழுதும் நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஒன்றாரியோவில் பதிவான குரங்கம்மை நோயாளர்களில் 95 வீதமானவர்கள் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் இந்த தொற்று பரவுகை அதிகமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.