சோமசுந்தரப் புலவரின் சிலையடி
ஆடிப்பிறப்பு நாளான இன்று நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று(17) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பூக்கள் தூவப்பட்டன.
ஆடிப்பிறப்பு விசேட உணவுப் பண்டமான ஆடிக்கூழ் அப்பகுதியில் நின்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
சங்கீதபூஷணம் சிவஞானராஜா, யாழ் பஸ் நிலைய முச்சக்கரவண்டிச் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.