ஜோ பைடன் விடயத்தில் நம்பிக்கை இழந்துள்ள பராக் ஒபாமா
2024 அமெரிக்க (US) அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) போட்டியிடுவது குறித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பைடன், தற்போதையநெருக்கடியான நிலைமையில் வெற்றிபெறுவார் என்பது சந்தேகமே என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடனின் முடிவு
இதேவேளை, இந்த வார இறுதியில் ஜோ பைடன் தேர்தலில் இருந்து வெளியேறக்கூடும் என்று பல உயர்மட்ட ஜனநாயகக் கட்சி தலைவர்கள் நம்பியிருப்பதாகவும் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் பராக் ஒபாமா கூறுகையில், “தமது வயது மற்றும் உடல் நிலை குறித்து புரிந்துகொண்டுள்ள ஜோ பைடன் உரிய முடிவெடுப்பார் என்றே கட்சி வட்டாரத்தில் நம்புகின்றனர்.
கொரோனா தொற்று
மட்டுமின்றி, புதன்கிழமை அவர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதும் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. ஆனால் தாம் நலமுடன் இருப்பதாகவே ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனுக்கு நெருக்கமான வட்டாரத்திலும், அவரது நெருங்கிய நண்பர்களும், தற்போதைய இறுக்கமான சூழலில் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஜோ பைடன் வெல்ல வாய்ப்பில்லை என்றே நம்புகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.