வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யும் சீன நிறுவனங்கள்
பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு சீன நிறுவனங்கள் கர்ப்ப பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
சோதனையில் அவர்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் வேலை கொடுக்கத் தயங்குகிறார்கள்.
இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, அரசு நடவடிக்கை எடுத்தது.
ஜியாங்ஷூவின் நான்டோங் நகரில் உள்ள 16 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்த 168 பெண்கள் கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக இரண்டு பாரிய கிளினிக்குகள் மற்றும் மருத்துவ பரிசோதனை மையத்தை வழக்கறிஞர்கள் பார்வையிட்டனர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்யாவிட்டாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தாலோ, கர்ப்பமாக இருந்தாலோ, இப்படிப்பட்ட பெண்களை சீனாவில் உள்ள பல நிறுவனங்கள் நேர்காணல் கட்டத்திலேயே ஒதுக்கித் தள்ளுகின்றன. இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தயங்குகின்றனர்.
இவ்வாறு பல நிறுவனங்கள் கர்ப்ப பரிசோதனைகளை கேட்கின்றன. ஆனால் அவ்வாறு செய்வது சீன சட்டப்படி குற்றமாகும். கர்ப்பிணித் தொழிலாளர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது.
பிறப்பு விகிதங்களை அதிகரிப்பது சீன அரசாங்கக் கொள்கையாக இருந்தாலும், அங்கு கர்ப்பிணிப் பெண்கள் வேலைகள் தொடர்பாக பாகுபாடு காட்டப்படுகிறார்கள்.