வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது
இலங்கையில் வானமே இடிந்து விழுந்தாலும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 19ம் திகதிக்குப் பின்னர்…
அனைவரும் வாக்களிக்க வசதியான நாளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையம் கூறுகிறது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் திகதி பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காவிடின் வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
எனினும், செப்டம்பர் 17 ஜனாதிபதி தேர்தல் நடக்காது ஏனெனில் செப்டம்பர் 17 போயா தினம் என்பதால் 18,19ம் திகதிகளில் தேர்தல் இடம்பெறாது. எனவே செப்டம்பர் 19ம் திகதிக்குப் பின்னர் தான் பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.