எல்லாம் அம்மா அப்பாவின் பணம்: ஒரு சுவாரஸ்ய சுவிஸ் ஆய்வு
சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
உலகின் பணக்கார நாடுகளில் சுவிட்சர்லாந்து ஏழாவது இடத்திலிருப்பதாக சமீபத்தில் வெளியான பணக்கார நாடுகளின் பட்டியல் ஒன்று தெரிவிக்கிறது.
எல்லாம் அம்மா அப்பாவின் பணம்…
ஆனால், சுவிட்சர்லாந்தில் வாழும் 300 பணக்காரர்களில் 80 சதவிகிதம் பேருடைய சொத்து, அவர்களாக சேர்த்தது இல்லை. எல்லாம், அவர்களுடைய பெற்றோர் சேர்த்துவைத்த சொத்து என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
சூரிச்சிலுள்ள the Economic Research Centre என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
அத்துடன், அந்த 300 சுவிஸ் பணக்காரர்களில், வெறும் 8 சதவிகிதத்தினர் மட்டுமே தாங்களாக சொத்து சேர்த்தவர்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சிலர், பணக்காரர் ஒருவரை திருமணம் செய்ததால் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்கள்.
மேலும், பெரும் பணக்காரர்களில் 90 சதவிகிதம் பேரும் ஆண்கள்தான் என்கிறது அந்த ஆய்வு.