யாழில். சட்டவிரோத மணல் அகழ்வு – நான்கு டிப்பருடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
பொலிசாரை கண்டதும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் மூன்று நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
அதேவேளை அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டனர்
டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் , கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசர்நாய்களை முன்னெடுத்துள்ளனர்.