இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இந்தியாவிற்கு பயணம் செய்யும் தமது நாட்டு பிரஜைகள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu Kashmir) போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க (USA) அரசு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா (India) பாகிஸ்தான் (Pakistan) எல்லைப் பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகளின் (Naxalites) புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளதுடன் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாகவும் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்கள்
குறிப்பாக, மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் (Manipur) வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், வன்முறை சம்பவங்கள், தவறான முறையிலான அத்துமீறல்கள் என்பன சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது
அதன்படி, சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தை, அரசு சேவை வழங்கும் பகுதிகளை குறிவைத்து இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.