இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்: வெளியான அறிக்கை
கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூட்டில் நடந்துள்ளன. தங்காலை, நுகேகொட, கம்பஹா,இரத்னபுர மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24, 20 இந்த கொலைகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2018-2022 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 7017 காயங்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 2030 குற்றங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.
வன்முறை குற்றச்செயல்கள்
நாட்டில் வன்முறைக் குற்றச் செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகத்தின் கூற்றுப்படி, 2018 ஐ விட கடந்த ஆண்டு இந்த குற்றங்கள் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
வீடுகளை உடைத்தல் மற்றும் கொள்ளை போன்ற வன்முறைக் குற்றங்களைத் தீர்க்கும் விஷயத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைந்த சதவீத தீர்வு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கை பொலிஸாரின் 2023 ஆம் ஆண்டு வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.