;
Athirady Tamil News

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற பிரித்தானியா: முதல் தங்கப் பதக்கத்தை வென்றது எந்த நாடு தெரியுமா?

0

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில், பிரித்தானியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

முதல் பதக்கம்

இரட்டையர் டைவிங் பிரிவில், பிரித்தானியாவின் Yasmin Harper மற்றும் Scarlett Mew Jensen இணை, முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

64 ஆண்டுகளில், இது பெண்களுக்கான டைவிங் பிரிவில் பிரித்தானியா வெல்லும் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதக்கத்தை தவறவிட்ட அவுஸ்திரேலியா

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த வெள்ளி அவுஸ்திரேலியாவுக்குத்தான் சென்றிருக்கவேண்டும்.

ஆனால், டைவ் செய்ய முயலும்போது அவுஸ்திரேலியாவின் Anabelle Smithக்கு கால் வழுக்க, அவர் தடுமாறி, டைவிங் பலகையின் ஓரத்துக்கே சென்றுவிட்டார்.

கீழே விழும் ஒரு நிலை ஏற்பட்டபோதும், சமாளித்துக்கொண்டு டைவ் செய்தார் Anabelle. ஆனால், அந்த சில விநாடிகள் தாமதத்தால், அவரும் அவரது சக வீராங்கனையும் வெவ்வேறு நேரங்களில் தண்ணீரைத் தொட, மதிப்பெண்கள் குறைந்தது. வெறும் 48.60 புள்ளிகளே அவர்களுக்குக் கிடைத்தது.

சீனாவின் Chen Yiwen மற்றும் Chang Yani இணை, 337.68 புள்ளிகள் பெற்று, 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

அமெரிக்க இணையான Sarah Bacon மற்றும் Kassidy Cook, 314.64 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார்கள்.

பிரித்தானியாவின் Yasmin Harper மற்றும் Scarlett Mew Jensen இணைக்கு 302.28 புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் Anabelle Smith வழுக்கியதால் வெண்கலப்பதக்கத்தைத் தவறவிட, அந்த வெண்கலப் பதக்கம் பிரித்தானியாவை வந்தடைந்தது.

எதிர்பாராமல் கிடைத்த பதக்கத்தால் நெகிழ்ந்த பிரித்தானிய அணி கண்ணீர் வடிப்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.