;
Athirady Tamil News

கொடூரத்தின் உச்சம்… முதலைகளுக்கு இரையான சடலங்கள்: தீக்கிரையாக்கப்பட்ட 3 கிராமங்கள்

0

பப்புவா நியூ கினியில் நடந்த மிக மோசமானப் படுகொலை சம்பவத்தில் குறைந்தது 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று கிராமங்கள் தீக்கிரை
பலரது சடலங்கள் முதலைகளுக்கு இரையானதாக வெளியான தகவலை அடுத்து, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தீவு நாட்டின் கிழக்கு Sepik பிராந்தியத்திலேயே பீதியை ஏற்படுத்தும் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

16 சிறார்கள் உட்பட 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் மூன்று கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து, 200க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தஞ்சம் புகுந்தனர்.

ஜூலை 16 மற்றும் 18 திகதிகளில் நள்ளிரவில் கிராமங்களுக்குள் புகுந்து வாள், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் 30 பேர்கள் கொண்ட இளைஞர்கள் என்றும், அவர்கள் இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்லது.

ஆனால் தாக்குதல் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையிலேயே சம்பவயிடத்திற்கு பொலிசார் சென்று விசாரணை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தாக்குதல் நடத்திய அந்த 30 பேர்களில் பெரும்பாலானோரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலைகளுக்கு இரையானதாக
நடந்த சம்பவத்தை விவரிக்க முடியாமல் பலர் வாய்விட்டு கதறியுள்ளனர். தாக்குதல்தாரிகள் மிருகத்தனமாக நடந்துகொண்ட நிலையில், பெண் ஒருவர் நதியில் குதித்து, பல மணி நேரம் வெள்ளத்தில் தத்தளித்து, உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

பலர் தலை துண்டிக்கப்பட்டு இறந்துள்ளனர். சிலரது சடலங்கள் நதியில் தள்ளப்பட்டு, முதலைகளுக்கு இரையானதாக கூறப்படுகிறது. எஞ்சிய சடலங்கள் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியில் 800க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள் பேசப்படுகிறது. தனி நபர்களைக் காட்டிலும் பழங்குடியினர் பெரும்பான்மையான நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகின்றனர்.

மட்டுமின்றி, வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாததால், இது போன்ற மோதல்கள் தொடர்கதையாக உள்ளது என்றே கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.