;
Athirady Tamil News

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள்

0

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் (Sarath Fonseka) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் மேலும் பலருடைய பெயர்கள் குறித்த பட்டியலில் எதிர்ப்பார்க்கப்படவுள்ளன.

இதற்காக அவர், அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் எனினும் அவர் எவ்வாறு போட்டியிடப்போகிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகிக்கும் அவர், அந்த கட்சியின் தலைமையுடன் முரண்பட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர்
எனவே, அவர் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவார் என்றே நம்பப்படுகிறது

இந்தநிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சார்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksha) போட்டியிடும் நிலையில், மேலும் பலரும் களத்தில் இறங்கவுள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் வெளியிட்டிருந்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரட்நாயக்க, தமது புதிய நிலைப்பாட்டை இன்னும் வெளியிடவில்லை

தமிழர் மத்தியில் இருந்து பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

எதிர்வரும் வாரங்கள்
இது தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையையும், தமது சுதந்திரம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு நாடிப்பிடிப்பு சர்வஜன வாக்கெடுப்பாகவும் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் பலர் போட்டியிடப்போவதாக கூறினாலும் இறுதியில் பொதுவான ஒரு வேட்பாளருக்கு ஆதரவை வெளியிட்டு, போட்டியில் இருந்து விலகிக்கொள்ளக்கூடிய நாடகமும் அரங்கேற்றப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே, எதிர்வரும் வாரங்கள் தீர்மானங்களும், முடிவுகளும் நிறைந்த வாரங்களாகவே இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.