244 நாட்களுக்கு பிறகு கோமாவிலிருந்து விழிந்த இளைஞர்: சாலையில் மீண்டும் சேர்ந்த சோகம்
244 நாட்கள் கோமா நிலையிலிருந்து விழித்த புளோரிடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கோமா நிலையில் இருந்து விழித்த இளைஞர்
244 நாட்கள் கோமா நிலையிலிருந்து விழித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ட்ரூ கோன் (Drew Kohn) என்ற 30 வயது இளைஞர் சோகமான சாலை விபத்தில் மீண்டும் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவர் 2017ம் ஆண்டு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தின் போது தலையில் காயமடைந்து ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது சிறந்ததாக இருக்கும் என்று அவரது தாயாரிடம் அறிவுறுத்தினர்.
ஆனால் அதை மறுத்து, தனது மகன் மீண்டும் வருவான் என்று நம்பிக்கையை தாய் வைத்து இருந்த நிலையில், கிட்டத்தட்ட 244 நாட்கள் கழித்து ட்ரூ கோன் கோமாவில் இருந்து மீண்டு வந்தார்.
பல ஆண்டுகள் கடுமையான மறுவாழ்வு பயிற்சிக்கு பிறகு, ட்ரூ கோன் நடப்பது மற்றும் பேசுவது ஆகியவற்றை மீண்டும் கற்றுக் கொண்டார்.
ட்ரூ கோனின் இந்த மீளுதல் ஒட்டுமொத்த நாட்டையும் உத்வேகப்படுத்தியது.
சாலை விபத்தில் உயிரிழப்பு
இந்நிலையில், ட்ரூ கோன் கடந்த வெள்ளிக்கிழமை காலை 5:30 மணியளவில் ஜாக்சன்வில்லே-வில்(Jacksonville) உள்ள காலின்ஸ் சாலையில்(Collins Road) நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது பிக்-அப் லொறி ஒன்று வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ட்ரூ கோன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், லொறியின் சாரதி இளைஞரை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார், அத்துடன் அவரே 911க்கு அழைப்பு விடுத்துள்ளார்.