;
Athirady Tamil News

அமெரிக்க பாஸ்போர்ட், தமிழ்நாட்டு ஆதார் கார்டுடன்…மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்த பெண் யார்?

0

மகாராஷ்ரா மாநிலத்தின் காட்டு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டில் கட்டி வைக்கப்பட்ட பெண்
மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் 50 வயதான பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட பெண்ணிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழ்நாடு முகவரியைக் கொண்ட ஆதார் அட்டை ஆகியவை இருந்தது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை, சோனுர்லி கிராமத்தைச்(Sonurli villag) சேர்ந்த ஆடு மேய்ப்பவர் ஒருவர் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார், மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக Sawantwadi மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் அவர் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், இருப்பினும் தற்போது வழங்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை காரணமாக அவர் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை வலையில் தமிழ்நாட்டு கணவர்
கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அந்த பெண் லலிதா காயி(Lalita Kayi) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடம் உள்ள அமெரிக்கா விசா காலாவதியாகிவிட்டது, மேலும் தமிழ்நாடு முகவரி கொண்ட ஆதார் மூலம் அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவர்தான் இந்த சம்பவத்திற்குப் பின்னால் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.