;
Athirady Tamil News

ரைசியின் மறைவு: ஈரானின் 9 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு

0

ஈரான் (Iran) நாட்டின் 9-வது ஜனாதிபதியாக மசூத் பேஸஷ்கியான் (Masoud Pezeshkian) பதவியேற்றுள்ளார்.

பேஸஷ்கியானின் பதவியேற்பு விழாவானது, ஈரான் நாடாளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்ராகிம் ரைசி
ஜூலை 5 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அடிப்படைவாதத் தலைவர் சயீத் ஜலிலியை 3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் பேஸஷ்கியான் தோற்கடித்தார்.

இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi), உலங்குவானூர்தி விபத்தில் உயிரழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.