;
Athirady Tamil News

நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க வேண்டுமா? அருமையான பானம் இதோ

0

நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் அருமையான பானம் ஒன்றினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்று பெரும்பாலான நபர்களுக்கு நுரையீரல் தொற்று என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டு. அதாவது புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் பிரச்சனை இருந்த நிலையில், தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளது.

நுரையீரல் பலவீனமாக இருந்தால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், ஆஸ்துமா, சளி இருமல் போன்ற பிரச்சினையும் தாக்க ஆரம்பித்துவிடும்.

இன்றைய மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நுரையீரல் பலவீனமாகிவிடுகின்றது. நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் பானம் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
எலுமிச்சை
புதினா
இஞ்சி
பாகற்காய்
தண்ணீர்

செய்முறை
கண்ணாடி பாட்டில் ஒன்றில் சுத்தமான தண்ணீர் 1 லிட்டர் அளவு நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு எலுமிச்சையை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு இதனுடன் ஒரு பாகற்காயை பொடியாக வெட்டி இதனுடன் சேர்க்க வேண்டும். தொடர்ந்து 10 அல்லது 15 புதினா இலைகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

ஒரு இஞ்சியை நன்றாக தட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இரவில் தயாரித்த இந்த பானத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.

காலையில் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து எடுத்து சாதாரண வெப்பநிலைக்கு வந்த பின்பு இதில் பாதி தண்ணீரை குடிக்கவும்.

வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்த பின்பு, 30 நிமிடத்திற்கு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.

இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அருந்தி வந்தால் நுரையீரலில் சேரும் நச்சுக்கள் நீங்கி நுரையீல் ஆரோக்கியமாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.