இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்த நாடு : ஐந்து கோடி பயனாளர்கள் பாதிப்பு
மத்திய கிழக்கு நாடான துருக்கி (Turkey) இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால் இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள தடை
துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக ஐந்து கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி ஆகும் அதேவேளை துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.