ஜேர்மன் தலைநகரில் ரயில் பாதையில் தீ… ரயில் சேவைகள் கடும் பாதிப்பு: சதிவேலையா?
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், ரயில்களுக்கான சிக்னல்கள் முதலான முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தும் கேபிள் ஒன்றில் தீப்பற்றியதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அது சதிவேலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
ரயில் சேவைகள் கடும் பாதிப்பு
பெர்லின் நகரில், Charlottenburg மாவட்டத்தில், ரயில் சிக்னல்கள் முதலான முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தும் கேபிள் ஒன்றில் தீப்பற்றியதாக ஜேர்மன் தேசிய ரயில்வேயான Deutsche Bahn தெரிவித்துள்ளது.
அதனால், சிக்னல்களும், பாதை மாற்றும் கட்டுப்பாடும் பாதிக்கப்பட்டுள்ளதால், பெர்லினின் மைய ரயில் நிலையம் முதலான பல்வேறு ரயில் நிலையங்களுக்கிடையே பயணிக்கும் ரயில்கள் தாமதமாகவும், மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்படவும், ரத்து செய்யப்படவும் நேர்ந்துள்ளது.
தொலைதூர ரயில்கள், உள்ளூர் ரயில்கள், சரக்கு ரயில்கள் என முதல் நூற்றுக்கணக்கான ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சதிவேலையா?
#S41, #S42 Wegen einer Beeinträchtigung durch Vandalismus im Bereich #Jungfernheide ist der Zugverkehr der Linien S41 und S42 zwischen #Westend und #Beusselstraße unterbrochen. Bitte nutzt zur Umfahrung die Verkerhsmittel der BVG. Infos unter: https://t.co/oVPgzoYdK4 pic.twitter.com/puKwT1ZX4t
— S-Bahn Berlin (@SBahnBerlin) August 2, 2024
ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேபிளில் தீப்பற்றியதற்குக் காரணம், தொழில்நுட்பக் கோளாறு அல்ல என தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது.
யாரோ வேண்டுமென்றே கேபிளை சேதப்படுத்தியுள்ளதாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, பெர்லின் குற்றவியல் பொலிசார் இந்த வழக்கு விசாரணையை பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளார்கள்.
ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் முன் பிரான்ஸ் ரயில் பாதைகளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.