;
Athirady Tamil News

ரூ.33,000 மதிப்புள்ள T-shirt அணிந்த CEO.., சம்பள உயர்வு இல்லை என கூறியதால் நெட்டிசன் கொந்தளிப்பு

0

அன்அகாடமி நிறுவனத்தின் சிஇஓ ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று கூறியது பேசு பொருளாகியுள்ளது.

அன்அகாடமி (Unacademy)
கடந்த 2015 -ம் ஆண்டில் ஹெமேஸ் சிங், கௌரவ் மஞ்சக் மற்றும் ரோமன் சைனி ஆகியோர் இணைந்து அன்அகாடமி (Unacademy) என்னும் edtech நிறுவனத்தை தொடங்கினர்.

இந்த நிறுவனத்தில் 91 ஆயிரம் ஆசிரியர்கள் பதிவு செய்தும், 99 மில்லியன் பேர் பதிவு செய்தும் பாடங்களை கற்று வருகின்றனர். இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு பதவியில் இருந்து விலகினார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 250 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சம்பள உயர்வு இல்லை
இந்நிலையில், Unacademy நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முஞ்சால், ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் சம்பள உயர்வு இல்லை என்று தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர், சம்பள உயர்வு குறித்து பேசிய வீடியோவில் ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள டி-ஷர்டை அணிந்துள்ளார்.

இதனை பார்த்த பயனர் ஒருவர், “இந்தCEO-க்கள் தங்கள் சொந்த வாழ்க்கைத் தரத்தை குறைக்க மாட்டார்கள். தங்கள் வணிகங்களை நடத்தும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்துவார்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.