;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் வேலை… பரவிவரும் மோசடி: ஒரு எச்சரிக்கை செய்தி

0

சுவிட்சர்லாந்தில் வேலை இருப்பதாக ஒன்லைனில் மோசடிகள் அதிகரித்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலை தருவதாக ஒரு மோசடி
சுவிட்சர்லாந்தில், பல துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, பணி வழங்குவோர் வேலைக்கு ஆட்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

இந்த விடயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மோசடியாளர்கள் போலி விளம்பரங்களை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தங்களை பணி வழங்குவோராக காட்டிக்கொண்டு, விளம்பரம் செய்து, வேலை தேடுவோரிடமிருந்து அவர்கள் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கிறார்கள்.

வேலை இருப்பதாகக் கூறும் விளம்பரங்களில் கால்வாசி போலி விளம்பரங்கள் என்கிறார் சூரிச்சை மையமாகக் கொண்டு இயங்கிவரும் வேலைவாய்ப்பு நிறுவனமான Kienbaum Executive Search நிறுவனத்தின் இயக்குநரான Jean-Philippe Spinas.

மோசடியாளர்களின் நோக்கம் என்ன?
வேலைக்கு விண்ணப்பிப்போரின் CVயிலிருந்து அவர்களுடைய தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி மற்றும் முகவரியை இந்த மோசடியாளர்கள் சேகரிக்கிறார்கள்.

அவற்றைப் பயன்படுத்தி பாஸ்வேர்டுகளைக் கண்டுபிடிக்கவோ அல்லது போலி digital profileஐ உருவாக்கவோ செய்யும் இந்த மோசடியாளர்கள், தேவையில்லாமல் அழைத்தோ, மின்னஞ்சல் மூலமோ தொந்தரவு செய்கிறார்கள்.

சில நேரங்களில், உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே, நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் உண்மையானதுதானா என உறுதி செய்துகொள்வது நல்லது. அத்துடன், உங்களைக் குறித்த எல்லா விவரங்களையும் தெரியப்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.