சஜித்துக்கு பெருகும் ஆதரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணி ஆகியன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளன.
இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அடுத்த வாரம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜித்துக்கு ஆதரவு
ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் உள்ளிட்டவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது ஆதரவை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.