;
Athirady Tamil News

பசில் ராஜபக்சவின் அறிவிப்பால் அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் தொடர்பில் ஆராய்ந்தோம் என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக பெரேரா விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம். பிரதமர் தினேஸ் குணவர்த்தன, எம்.பி காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.

கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல் ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம்.

எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர் விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம், அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சி உறுப்பினரே என பசில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் முடிவை நிராகரித்து ரணிலிற்கு ஆதரவளித்தவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றவேண்டும் என மாவட்ட மட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவ்வாறான முடிவை எடுத்தால் நீதிமன்றம் அதற்கு ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மஹிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் இது அதற்கான நேரமில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு நாங்கள் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.