;
Athirady Tamil News

சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள்- ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம்

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் என்பன குறித்து விரிவாக கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை அட்டாளைச்சேனை ஸக்கி மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் முன்னாள் கல்முனை மாநகர உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஏ.சீ.எம்.சமால்தீனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் , கட்சியின் தவிசாளர், பிரதித் தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவீகள், கல்விமான்கள் என பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.