;
Athirady Tamil News

நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாகும் பிரண்டை சூப்

0

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பிரண்டை, இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் காணப்படுகின்றனது.

வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய பிரண்டையின் வேர் மற்றும் தண்டு பெரும்பாலும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதில் வைட்டமின் சி, இ, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு , ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது.

இது பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இதை தினமும் ஒரு தடவை சூப் வைத்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

இப்படி கிடைக்கும் நன்மைகளை அப்படியே எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த சூப் செய்ய

தேவையான பொருட்கள்
பிரண்டை – ஒரு கட்டு
தக்காளி – 2 அல்லது 3
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
மல்லித்தழை – சிறிதளவு
வெள்ளை மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்யும் முறை
பிரண்டையை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிளகுத் தூள் தவிர மற்றவை அனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு அடுப்பில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதன் பின்னர் அதை வடிகட்டி மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.

பிரண்டை சாப்பிடுவதன் பயன்கள்
நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் இதை தாராளமாக உண்ணலாம், பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள் இதற்கு சிறந்த நிவாரணி.

இதை ஆண்கள் அதிகமாக சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஆண்மை பெருகும். மூலத்தில் பிரச்சனை இருப்பவர் இதை தினமும் சாப்பிடுவது நன்மை தரும்.

இது ரத்தத்தில் அளவுக்கு மீறி இருக்கும் கொழுப்பு வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும் தன்மை பிரண்டைக்கு இருக்கிறது.

எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி, வீக்கத்தை இது விரைவாகக் குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும் செயல்பாடுகளை பிரண்டை துரிதப்படுத்துகிறது.

இது குழந்தைகளுக்கு மிகவும் நன்மை தரும். இவர்களுக்கு உண்டாகும் வயிற்று உப்புசத்துக்கு, இந்த நீரைச் சிறிதளவு கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகரிக்கும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் பிரண்டை அதற்கு நிவாரணம் தரும்.

தினமும் வேலைக்கு செல்பவர்கள் சந்திக்கக்கூடிய முதுகுவலி, கழுத்து வலி காரணமாக தலையை அசைக்க முடியாமலும் அவதிப்பட நேரிடலாம். இதற்கு பிரண்டை சாப்பிட்டால் அது உடலில் பல மாற்றத்தை ஏற்படுத்தும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.