தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன்: வெளிப்படையாகக் கூறிய ஜனாதிபதி வேட்பாளர்
தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்.
தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்.
டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்குடனான பேட்டி ஒன்றின்போது ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
அப்படி நாட்டை விட்டு வெளியேறினால், நான் வெனிசுவேலா நாட்டுக்குச் சென்றுவிடுவேன் என்று கூறிய ட்ரம்ப், அப்புறம் நாம் சந்திக்கவேண்டுமானால், வெனிசுவேலாவில்தான் சந்திக்கவேண்டும் என்றார்.
காரணம், நம் நாட்டைவிட வெனிசுவேலா பாதுகாப்பான நாடு என எலான் மஸ்கிடம் கூறினார் ட்ரம்ப்!