;
Athirady Tamil News

விண்வெளியில் இரண்டு மாதங்களாக சிக்கிக்கொண்டுள்ள சுனிதா: உணவுக்கு என்ன செய்கிறார்?

0

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரருமான Butch Wilmoreம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

கவலையை ஏற்படுத்திய செய்தி
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய சுனிதாவும் Wilmoreம், 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

ஆக, இன்னும், குறைந்தது ஆறு மாதங்களாவது சுனிதாவும் Wilmoreம் விண்வெளி மையத்தில் தங்கவேண்டியிருக்கும்.

உணவுக்கு என்ன செய்கிறார்கள்?
அப்படியானால், அவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள், இத்தனை மாதங்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள் என பல கேள்விகள் எழுவதை மறுப்பதற்கில்லை.

விடயம் என்னவென்றால், சுனிதாவும் மற்ற விண்வெளி வீரர்களும் தங்கியிருக்கும் விண்வெளி மையம், 356 அடி நீளம் கொண்டது. அதாவது, அது, அமெரிக்க கால்பந்து மைதானம் ஒன்றின் அளவுக்கு பெரியதாகும்.

அது ஆறு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டைவிட பெரியதாகும். அங்கு தூங்குவதற்காக ஆறு அறைகள், இரண்டு குளியலறைகள், ஒரு ஜிம் மற்றும் வேடிக்கை பார்க்க 360 டிகிரி கோணத்தில் ஜன்னல் ஒன்றும் அமைந்துள்ளன.

ஒன்பது வீரர்கள்
சர்வதேச விண்வெளி மையத்தில், சுனிதா மற்றும் Wilmoreஉடன், நான்கு அமெரிக்க வீரர்களும் மூன்று ரஷ்ய வீரர்களும் தங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்பது பேருக்கும் தேவையான பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சி முதலான உணவுகள், முட்டைகள், காய்கறிகள், பாண், நொறுக்குத்தீனிகள் மற்றும் இனிப்பு வகைகளும் அங்குள்ள சமையலறையில் உள்ளனவாம்.

அத்துடன், பூமியிலிருந்து அவ்வப்போது உணவு அனுப்படுகிறது. சமீபத்தில், இம்மாதம் 6ஆம் திகதி சர்வதேச உணவு மையத்துக்கு உணவு சப்ளை செய்யப்பட்டுள்ளது.

உணவு கொண்டுவரும் கலங்கள் காலியானதும், அவற்றில் குப்பைகளை நிரப்பி, திருப்பி பூமிக்கு அனுப்புகிறார்கள் வீரர்கள்.

பெரும்பாலான உணவுகள் நீரகற்றப்பட்டவை (dehydrated). ஆகவே, சாப்பிடும்போது உணவுடன் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும், சில உணவுகளை சூடாக்கினால் போதும்.

தண்ணீர்
விண்வெளி வீரர்கள் தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று யோசித்தால் கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் உள்ளது. காரணம், அங்கு சிறுநீரை தண்ணீராக மாற்றும் ஒரு கருவி உள்ளது. அத்துடன், விண்வெளி வீரர்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வை, சுவாசிக்கும் காற்றிலிருந்து கிடைக்கும் ஈரம் ஆகியவற்றையும் அந்த கருவி உறிஞ்சி, தண்ணீராக மாற்றிவிடும்.

தூக்கம்

விண்வெளி வீரர்கள் எங்கு வேண்டுமானாலும் தூங்கலாம். அதாவது, தரையிலோ, சுவரிலோ ஏன் கூரையை ஒட்டி கூட தூங்கலாம்.

ஏனென்றால் விண்வெளி மையத்துக்குள் புவியீர்ப்பு விசை கிடையாது. ஆகவே, நின்றுகொண்டோ, படுத்துக்கொண்டோ, எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம்.

காற்று
வீரர்கள் சுவாசிப்பதற்காக ஆக்சிஜனை உற்பத்தி செய்யவும், சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கவும் கருவிகள் உள்ளன.

கழிவறை
புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் கழிவறையைப் பயன்படுத்துவது கடினம்தான். ஆகவே, அதற்கென வடிவமைக்கப்பட்ட கழிவறைகளில், சிறுநீரை உறிஞ்ச ஒரு குழாயும், மலத்தை வெளியேற்ற ஒரு அமைப்பும் உள்ளன.

அத்துடன் சுத்தம் செய்துகொள்வதற்காக, ஈரமான மற்றும் ஈரமற்ற என பலவகை டாய்லெட் பேப்பர்களும் உள்ளன.

எப்படி இருக்கிறார்கள் சுனிதாவும் Wilmoreம்?

எங்கள் விண்கலம் நிச்சயம் எங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் என்று என் மனம் சொல்கிறது, ஒரு பிரச்சினையும் இல்லை என்கிறார் சுனிதா.

அவர்களுடைய விண்கலத்தை பழுதுபார்க்கும் பணி இன்னமும் முடியவில்லை. என்றாலும், அவை சீக்கிரம் சரி செய்யப்படும், நாங்கள் விரைவில் வீடு திரும்புவோம் என்கிறார் Wilmore.
Wilmoreஇன் மனைவியோ, அவர் நிம்மதியாக விண்வெளியில் இருக்கிறார். கவலை எதுவும் இல்லை என்கிறார்.

டெக்சாசிலுள்ள தேவாலயம் ஒன்றில் நீண்ட காலமாக முக்கிய பொறுப்பு வகித்துவரும் Wilmore, கடவுள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் என்ற நம்பிக்கை உடையவர்.

அது தங்கள் குடும்பத்துக்கு பெரிய அமைதியைக் கொடுத்துள்ளது என்கிறார் Wilmoreஇன் மனைவி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.