;
Athirady Tamil News

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ) பகுதி / 2

0

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ) பகுதி /2
##############################

சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..

குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீங்கள் வாழ்ந்திட வேண்டும்..

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..

எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..

வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றோம்..

இன்றைய நாளில் புங்குடுதீவில் பிறந்து, சுவிஸ் நாட்டில் லங்கெந்தால் பிரதேசத்தில் வதிக்கும் பஞ்சன் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் திரு.வி.அ. பஞ்சலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வானது அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா எல்லைக் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அமரர்கள் வி.அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புப்புதல்வன் பஞ்சன் என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திரு.பஞ்சலிங்கம் தனது பிறந்தநாளினை அவரது மனைவி அன்னாம்பாள், மக்கள் பிரியங்கன், பிரவீன், மருமகள் சுபரீனா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கொண்டாடும் அதேவேளை மூன்றுதினத்துக்கு முன்னர் முதல் நிகழ்வாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா எல்லைக் கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கிராம மக்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது நீங்கள் அறிந்ததே..

அன்றையதினம் வன்னி எல்லைக் கிராமமொன்றில் விசேட சைவ உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன் கலந்து கொண்டோரின் குடும்ப உறவுகளுக்கும், மற்றும் வயது முதிர்ந்தோர், தேவையுடையோர் எனப் பலருக்கும் வீடுகளுக்கும் உணவு வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..

இரண்டாவது நிகழ்வாக திரு.பஞ்சலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை அவரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் மூன்று நாட்களுக்கு பின்னர் இன்றையதினம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது. முதலில் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்துப்பா பாட்டுப் பாடி குதூகலமாக கொண்டாடினார்கள். பின்னர் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

அத்துடன் இன்றையதினம் விசேட தேவையுடையோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் எனப் பல்வேறு கிராம மக்களுக்கு மேற்படி உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. மறுநாளே மேற்படி இரண்டாவது நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்திருந்த போதிலும், கடந்த இரண்டுமூன்று தினங்களாக விடாது பெய்த அடைமழை காரணமாக பிற்போடப்பட்டு, இன்றையதினம் நடைபெற்றது.

மேற்படி இன்றைய நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க சமூக செயற்பாட்டாளரான திருமதி பிரியங்கா எனும் திருமதி.பிரியதர்ஷினி அசோக்குமார் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தார். இந்நிகழ்வில் வவுனியா அந்தமான் தீவு கிராம தலைவர் திரு. ராஜரத்தினம் குமார், அந்தமான் தீவு கோவில் செயலாளர் திருமதி. நாகேந்திரன் மணி ஆகியோர் முன்னிலை வகிக்க கிராம மக்கள் மாணவ மாணவிகள் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.பஞ்சலிங்கம் அவர்களை “பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

அத்தோடு மேற்படி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.பஞ்சலிங்கத்தின் குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
11.08.2024

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (வீடியோ) பகுதி 2

அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (வீடியோ)

அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ)

அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.