;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்த திலித்!

0

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஜும்மா பள்ளிவாசல், நல்லை ஆதீனம், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் திலித் ஜயவீர சென்றார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்பில, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

குறித்த கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது பொதுக்கூட்டம் இன்று மதியம் (17) ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.