ரஷ்யாவிற்கு பேரிடி முக்கியமான விநியோக மையத்தை தகர்த்தது உக்ரைன் படை
உக்ரைன்(ukraine) படையினர் ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதியில் ஊடுருவியுள்ள நிலையில், சீம் ஆற்றின் மீது உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை தகர்த்துள்ளனர்.
Glushkovo நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மாவட்டத்தின் ஒரு பகுதியை துண்டித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் ஏவுகணை மூலம் பாலம் தகர்ப்பு
ரஷ்யா தனது துருப்புக்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ள இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது அந்த பாலம் தகர்க்கப்பட்டமை விநியோக முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்.
இந்த பாலத்தில் முன்னர் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்கா அளித்த HIMARS ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தரப்பு ரஷ்யாவுக்கு நெருக்கடி அளித்துள்ளது.
இந்த நிலையில், Kursk பிராந்திய ஆளுநர் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இது ரஷ்யாவுக்கு பின்னடைவு என்பதையும் பதிவு செய்துள்ளார்.
மக்களை வெளியேற்றும் நடவடிக்கை
உக்ரைன் எல்லையின் வடக்கே 6.8 மைல்கள் தொலைவில் இந்த பாலம் அமைந்துள்ளது. தற்போது Glushkovsky பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா துரிதப்படுத்தியுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள வேறு சில பாலங்களும் உக்ரைன் படைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.