;
Athirady Tamil News

பண்டைய வரலாற்றை மையப்படுத்தி கட்சி கொடி வடிவமைப்பு.., விஜய் நகர்த்தும் காய் வெற்றி பெறுமா?

0

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி வடிவமைப்பு குறித்தான முடிவை நடிகர் விஜய் எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

கட்சி கொடி
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சிக்கொடியின் வடிவமைப்பு குறித்த முக்கிய தகவல் வந்துள்ளது. அதாவது கட்சி கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெறவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

வாகை என்றால் வெற்றி என்று அர்த்தம். இந்த அடிப்படையில் கட்சி கொடியில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையிலும் வாகை மலர் இடம்பெற முடிவு செய்துள்ளனர்.

பண்டைய காலங்களில் போரில் வென்ற மன்னர்களுக்கு வாகை மலர் சூடப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியில் வாகை மலர் இடம்பெற விஜய் முடிவு செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.