ஜேர்மனில் நிகழ்ந்த இசை திருவிழாவில் அசம்பாவிதம்: ராட்டினத்தில் பற்றிய தீயினால் 30 பேர் காயம்
ஜேர்மனியில் நடைபெற்ற இசை திருவிழாவில் பெரிய சக்கர ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இசை திருவிழாவில் தீ விபத்து
ஜேர்மனியின் லீப்ஜிகல்(Leipzig) பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை திருவிழாவில் பொழுதுபோக்கிற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய சக்கர ராட்டினத்தில் திடீர் தீ விபத்து எற்பட்டது.
ஜேர்மன் rapper ஸ்கை அகு(Ski Aggu) பாடிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ராட்டினத்தின் 2 பெட்டிகள்(gondolas) முற்றிலுமாக தீக்கிரையானது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.
30 பேர் காயம்
இந்த தீ விபத்தில் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர், அதில் 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வழங்கிய தகவலில், 4 பேர் தீ விபத்தில் காயமடைந்ததாகவும், ஒரு நபர் ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் இதில் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.