அடம்பிடிக்கும் ஆண்ட்ரூ… விண்ட்சர் மாளிகைக்கு மன்னரிடம் இருந்து பறந்த உத்தரவு
விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற மறுத்துவருவதை அடுத்து, சார்லஸ் மன்னர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
31 அறைகள் கொண்ட விண்ட்சர் மாளிகை
விண்ட்சர் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு என அளிக்கப்பட்டுவந்த 10 பேர்கள் கொண்ட பாதுகாப்பு குழுவினரை அங்கிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் சார்லஸ் மன்னர்.
தற்போது விண்ட்சர் மாளிகையில் உயரடுக்கு பாதுகாப்பு தேவையில்லாதது என்றே மன்னர் குறிப்பிட்டுள்ளார். விண்ட்சர் மாளிகை தொடர்பான நெருக்கடி அதிகரித்துவரும் நிலையிலும், மன்னரும் இளவரசர் ஆண்ட்ரூவும் ஸ்கொட்லாந்தின் பல்மோரல் எஸ்டேட்டில் ஒன்றாக தங்க இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 31 அறைகள் கொண்ட விண்ட்சர் மாளிகைக்கு 10 பேர்கள் கொண்ட பாதுகாப்பு குழு ஒன்றை நியமிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான செலவுகளை மன்னரே ஏற்றெடுத்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் செலவில் லண்டன் பொலிசார் குழு ஒன்று விண்ட்சர் மாளிகையில் பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்து வந்தது.
ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ வன்கொடுமை வழக்கில் சிக்கியதை அடுத்து, மறைந்த ராணியாரால் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டது. அதன் பின்னரே, 10 பேர்கள் கொண்ட தனியார் பாதுகாப்பு குழு ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
மன்னர் ரத்து செய்திருந்தார்
ஆனால் தற்போது அவர்களையும் மன்னர் நீக்கியுள்ளார். இதனால், பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இளவரசர் ஆண்ட்ரூ விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.
உண்மையில் விண்ட்சர் மாளிகையில் இருந்து ஆண்ட்ரூவை வெளியேற்றவே மன்னர் பாதுகாப்பு குழுவினரை நீக்கியுள்ளார். அதாவது, அவர்களுக்கான ஒப்பந்தம் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது. அதுவரையில் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்றே அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஏற்கனவே இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் தொகையை மன்னர் ரத்து செய்திருந்தார். இருப்பினும் அவர் விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேறவில்லை.
தமது முன்னாள் மனைவியுடன் தற்போதும் விண்ட்சர் மாளிகையில் ஆண்ட்ரூ வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.