;
Athirady Tamil News

நாட்டையே உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சஞ்சய் ராயின் சகோதரி கொடுத்த அதிர்ச்சி தகவல்!

0

பெண் மருத்துவர் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும் நாங்கள் சஞ்சய் உடலை எடுத்து செல்ல மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

பெண் மருத்துவர் கொலை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். எலும்பு முறிவு, கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கழுத்து தசை, உச்சந்தலை கைகள் என உடலின் 16 இடங்களில் காயம் இருந்தது .

மேலும் பயிற்சி பெண் மருத்துவர் பிரேத பரிசோதனையின் முடிவில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், தோல் ஆகியவரை டி.என்.ஏ.சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் கைதாகி இருக்கும் சஞ்சய் ராயின் டி.என்.ஏ.உடன் பொருந்தி இருக்கிறது.

உடலை எடுத்து செல்ல மாட்டோம்..
இந்த நிலையில் சஞ்சய் ராய் குறித்து போலீஸ் விசாரணையில் முழு விபரங்களும் தெரியவந்துள்ளன. தாய், 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார் . இவரது மூத்த சகோதரி கொல்கத்தா போலீசில் உதவி சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். தங்கை போலீஸ் தன்னார்வலராக உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டில் சஞ்சய் ராய் போலீசில் தன்னார்வலராக சேர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் இணக்கமாக இருந்துள்ளார். காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தேவையான மருத்துவத்திற்காக அடிக்கடி மருத்துவமனை வந்து சென்றிருக்கிறார். உயரதிகாரிகளின் செல்வாக்கு இருந்ததால் மருத்துவனையில் அதிக செல்வாக்குடன் வலம் வந்திருக்கிறார்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் குறித்து அவரது சகோதரி அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறார் . அவருக்கு நல்ல குணம் கூட கிடையாது பெண் மருத்துவர் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும் நாங்கள் சஞ்சய் உடலை எடுத்து செல்ல மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.