கடவுளுக்கு நன்றி! அடையாளம் தெரியாத நபரின் விளையாட்டால் விபரீதம்..தப்பிய 18 வயது இளைஞர்
அமெரிக்காவில் கேம் ஆப் சிக்கன் விளையாட முடிவெடுத்த நபரால், 18 வயது இளைஞர் விபத்தில் சிக்கினார்.
18 வயதான இளைஞர்
வாஷிங்டனில் உள்ள Spokaneவை சேர்ந்தவர் ஜோர்டான் பாட்டர். 18 வயதான இவர் கடந்த 3ஆம் திகதி இரவு காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அவர் 29வது அவென்யூவில் மேற்கு நோக்கி செல்லும்போது, கிழக்கு நோக்கி சென்ற கார் ஒன்று அவரது லைனில் வளைந்து நேராக வந்துள்ளது.
குறித்த அடையாளம் தெரியாத நபர் தனது காருடன் game of Chicken விளையாட்டை விளையாட முடிவு செய்து இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த கார் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக ஜோர்டான் தனது வாகனத்தை இடதுபுறமாக திரும்பியுள்ளார். இதில் அவரது கார் ஒரு வீட்டின் முன் உள்ள கான்கிரீட் தடுப்பில் மோதியது.
உயிர் பிழைத்த ஜோர்டான்
இந்த விபத்தில் சிக்கிய ஜோர்டான் அதிர்ஷ்டவசமாக Airbags செயல்பட்டதால் உயிர் பிழைத்தார். எனினும் அவருக்கு வயிற்று குடலிறக்கம், அடிவயிற்று சுவரில் அடைப்பு, கால் இடறியது, மூளையதிர்ச்சி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஜோர்டானுக்கு இடது கையில் தையல் தேவை என்றும், அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து குறித்து ஜோர்டான் கூறுகையில், “இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். அவர்களைப் பிடிக்க முயற்சிக்கிறேன். இது உண்மையானது என்று நான் நினைக்கவில்லை.
நிச்சயமாக dashcam-ஐ பெறுவேன், அதை யாருக்கும் பரிந்துரைப்பேன். நான் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில் இது மிகவும் கடுமையான விபத்து. மேலும் இது மிகவும் மோசமாக இருந்திருக்கலாம் என்று நான் உணர்கிறேன்” என்றார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக Spokane பொலிஸார் தெரிவித்துள்ளனர்.