பிரிந்து சென்றவர்களுக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் (Anuradhapura) சல்காடு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் வேறு கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல்
இதேவேளை, தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன்.
தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன்.
ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (namal Rajapaksa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.