நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது : சரத் பொன்சேகாவின் திட்டம்
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படாமல் அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை அகற்றாமல் நாடாளுமன்றத்திலுள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை தேசிய தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசேய தாதுகோபுரத்தை தரிசனம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழல் அரசியல் கலாசாரத்தின் விளைவுகளால் நாடு சூழப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து விடுபட அனைவரும் சுதந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட்டு நாட்டை தேசிய தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.