பிரித்தானியாவை துவம்சம் செய்துவரும் Lilian புயல்… 60,000 வீடுகளுக்கு பாதிப்பு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, சுமார் 60,000 வீடுகள் மின்தடை முதலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
பயணம் செய்யவேண்டாம் என ஆலோசனை
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடு ஆகிய பகுதிகள், Lilian என பெயரிடப்பட்டுள்ள புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ரயிலில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
Leeds Festivalக்காக கூடியிருந்த மக்கள், பலத்த காற்று வீசுவதால், கூடாரங்களுக்குள் தங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Leeds Festivalக்காக வந்துகொண்டிருப்போர் கார்களுக்குள்ளேயே இருக்குமாறும், இதுவரை புறப்படாதவர்கள், பயணத்தை தாமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் 14 விமானங்களின் புறப்பாட்டை ரத்து செய்துள்ளது. பல விமானங்கள் தாமதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சனிக்கிழமை மதியம் 1.00 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில், Isle of Wight முதல் Ipswich வரையும், Suffolk மற்றும் லண்டனும் அடங்கும்.