;
Athirady Tamil News

அமெரிக்காவில் நடந்த ஸ்டிங் ஆபரேஷன்! சிக்கிய 7 இந்தியர்கள்

0

அமெரிக்காவில் தகாத தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக நடந்த ஸ்டிங் ஆபரேசனில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஸ்டிங் ஆபரேஷன்
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் டென்டன் கவுண்டி பகுதியில் நடைபெற்ற ஸ்டிங் ஆபரேசனில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டென்டன் கவுண்டி பொலிஸாரால் 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சமூகத்தில் பாலியல் சேவைகளை பெற முயற்சிக்கும் நபர்களை குறிவைத்து இந்த ஸ்டிங் ஆபரேஷன் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
இந்த ஸ்டிங் ஆபரேஷனில் கார்த்திக் ராயபதி, கல்லா மோனிஷ், அமித் குமார், ஜெய்கிரண் ரெட்டி மேகலா, நபின் ஷ்ரேஸ்தா, நிகில் கும்மாரி மற்றும் நிகில் பாண்டி என 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது தகாத தொழிலில் ஈடுபட கோருதல், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய முயலுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.