மாதச் செலவுக்கு ரூ.6 லட்சமா? நீங்களே சம்பாதியுங்கள் – பெண்ணிடம் கொந்தளித்த உயர்நீதிமன்றம்
மாதச் செலவிற்கு கணவரிடம் பணம் கேட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
பெண் கோரிக்கை
கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், மாதச் செலவிற்கு தனது கணவரிடம் இருந்து சுமார் ரூ.6.16 லட்சம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.
இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் அப்பெண் உணவு, உடை, காலணி உள்ளிட்டவைக்கு ரூ.60,000. மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் என பட்டியலிட்டார்.
நீதிபதி காட்டம்
அதனைத் தொடர்ந்து விசாரித்த பெண் நீதிபதி, யாராவது ஒரு மாதத்திற்கு இவ்வளவு செலவு செய்வார்களா? அப்படி செலவு செய்ய வேண்டுமென்றால் அவரையே சம்பாதிக்கச் சொல்லுங்கள். கணவர் ஏன் தர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், உணவு, உடை, காலணி உள்ளிட்டவைக்கு ரூ.60,000. மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் என பட்டியலிட்டது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் வராது.
வேறு எந்த பொறுப்பும் இல்லையா, குழந்தைகளை பற்றி கூட நீங்கள் யோசிக்கவில்லையே எனவும் நீதிபதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.