;
Athirady Tamil News

நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என யாழில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி அழைப்பு

0

கடந்த காலத்தில் பல இரத்தக்கரைகள் உள்ளன அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்துவிட முடியாது மீண்டும் நாம் வாழ்வதற்கு இத்தனை இடர்பாடுகள் எமக்குள் இருந்தாலும் நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 97வது பிறந்தநாள் நினைவு பேருரை அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வீரமணி அவர்களின் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் தெரிவிக்கையில்,

நாம் இன்னும் உரிமைகளை பெறவில்லை. நாம் லட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மிகப்பெரிய இழப்புகளை பெற்றுள்ளோம். நாம் சிந்திக்கிற பொழுது அனைவரும் ஒற்றுமையாக சிந்திக்க வேண்டும்.

அமிர்தலிங்கம் அவர்கள் மிகப் பெரும் ஆளுமை உள்ள மனிதர். எனவே அவர் பல்வேறு வழிமுறைகளில் தமிழ் மக்களுக்கும் தமிழ அரசியல் தலைவர்களுக்கும் தனது கருத்துக்களை விட்டுச் சென்றார்.

ஒவ்வொரு நாளும் முடிவல்ல இருக்கிறது, அவற்றைப் பற்றி சிந்திக்கின்ற பொழுது இங்கே உள்ள புகைப்படம் நியாபகம் வருகிறது. தந்தை செல்வா தொடங்கி எவ்வுலகில் இருந்தாலும் இந்த ஊரில் இருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகளை நாம் படிக்கட்டாக மாற்றி மறக்கப்பட்ட இனத்தை மீண்டும் விழிப்புணர்வுடன் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஓரணியாக திகழ வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.