பிரித்தானிய பாடசாலை சுவரில் சர்ச்சை வாசகம்! சிசிடிவி காட்சிகள் ஆய்வு
பிரித்தானியாவில் பர்மிங்காம் ஆரம்பப் பாடசாலை சுவரில் No Whites என எழுதப்பட்டது குறித்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
Graffiti வாசகம்
சமீபத்திய வாரங்களில் பிரித்தானியாவில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, வியாழன் அதிகாலை பர்மிங்காமில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், ஆரம்ப பாடசாலைக்கு வெளியே சுவரில் ‘No Whites’ என எழுதியது சிசிடிவியில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் சுற்றிப் பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது.
இதேபோன்ற Graffiti வாசகம் பாடசாலையில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள லாங்டன் சாலை மற்றும் Farndon சாலையிலும் தெளிக்கப்பட்டது.
சமூக அச்சத்தைத் தணிக்க
எவ்வாறாயினும், இந்த மூன்று வெறுக்கத்தக்க முழக்கங்களுக்கும் ஒரே நபர் தொடர்புடையவரா என்ற கருத்து எதுவும் இல்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், சமூக அச்சத்தைத் தணிக்க ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், West Midlands காவல்துறை செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், “the Alum Rock பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் Graffiti தெளிக்கப்பட்டதையடுத்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். Graffiti-ஐ உடனடியாக அகற்றுவதை உறுதிசெய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.