பங்களாதேஷ் வெள்ள பாதிப்பில் 54 பேர் பலி: 2 மில்லியன் சிறுவர்களுக்கு ஆபத்து: Unicef எச்சரிக்கை!
பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 54 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கு
பங்களாதேஷ் நாட்டில் ஏறட்டுள்ள வெள்ளத்தில் 54 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வழங்கிய தகவலின் அதிகபட்சமாக 19 பேர் Feni மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர், இதில் 6 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உள்ளடங்குவர்.
பெரும் மழையால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வெள்ளம் கிழக்கு பங்களாதேஷ் நாட்டின் 11 மாவட்டங்களை அபாயத்தில் தள்ளியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்களை பாதித்துள்ளது, மேலும் 1 மில்லியன் மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது.
Unicef எச்சரிக்கை
வீடுகள், பள்ளிகள், மற்றும் கிராமங்கள் ஆகியவற்றின் வழியாக வெள்ளம் அபாயகரமாக பாய்வதால் கிட்டத்தட்ட 2 மில்லியன் சிறுவர்கள் ஆபத்தில் இருப்பதாக Unicef எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் உணவு மற்றும் அவசர நிவாரண பொருட்கள் கிடைக்காமல் போராடுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 34 ஆண்டுகளில் கிழக்கு பங்களாதேஷ் நாட்டை இந்த வெள்ளம் அதிகமாக பாதித்து இருப்பதாகவும் 5.6 மில்லியன் மக்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும் Unicef அறிக்கையில் தெரிவித்துள்ளது.