;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய வடகொரியா பதிலுக்கு புடின் அளித்த பரிசு

0

உக்ரைனுக்கு(ukraine) எதிரான போரில் ரஷ்யாவிற்கு(russia) வடகொரியா(north korea) ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குதிரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தென் கொரியா(south korea) தெரிவித்து இருப்பதாவது,

24 குதிரைகள் வடகொரியாவுக்கு
ரஷ்யா, உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-க்கு (kim jong un)குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புடின்(putin) 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது.

இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள்
இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து இருப்பதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ஒரு ஜோடி நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஓகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புடின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.