பணத்திற்கு மாற்றாக தங்கத்தை பயன்படுத்தும் ரஷ்யா-சீனா: அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் காரணமா?
ரஷ்யா மற்றும் சீனா தங்கள் பொருட்களுக்கான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தங்கத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-சீனா பரிவர்த்தனை
போர் தாக்கங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இத்தகைய அதிகரித்த சிரமங்களின் காரணமாக ரஷ்யாவும், சீனாவும் தங்கள் இருநாடுகளுக்கு இடையிலான வங்கி பரிவர்த்தனைகளில் பொருட்களுக்கான பணத்தை செலுத்துவதற்கு தங்கத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், ரஷ்யாவில் இருந்து தங்கம் வாங்கப்பட்டு அவற்றை ஹாங்காங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் தங்கத்தின் வருமானம் உள்ளூர் வங்கி கணக்குகளில் வரவு செய்யப்படுகிறது.
மேலும் இந்த பரிவர்த்தனைகளை எளிமையானதாக மாற்ற சீன நிறுவனங்களிடம் இருந்து முத்திரை மற்றும் கையொப்பங்களை பெறுவதற்கு ரஷ்ய நிறுவனங்கள் எல்லைகள் முழுவதும் ஆவணங்களை நேரடியாக எடுத்து செல்லவதற்கு கூரியர்களை(couriers) நியமித்துள்ளனர்.