;
Athirady Tamil News

உக்ரைனில் விளையாட்டு அரங்கை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 47 பேர் காயம்

0

உக்ரைனின் கார்கிவ் நகர விளையாட்டு அரங்கின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 47 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்யா தாக்குதல்
ரஷ்யா மீதான உக்ரைனின் மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்(Kharkiv) மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது, இது 5 சிறுவர்கள் உட்பட 47 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் நகரின் வடகிழக்கு பகுதி மீது வணிக வளாகம் மற்றும் முக்கிய விளையாட்டு அரங்கின் மீது ஏவுகணை தாக்கியது.

மேயர் Ihor Terekhov, ரஷ்ய தாக்குதலில் Saltivskyi மற்றும் Nemyshlianskyi மாவட்டங்கள் உள்ளானதாக தெரிவித்துள்ளார், மேலும் இஸ்கந்தர் ஏவுகணைகளை(Iskander missiles) ரஷ்யா இந்த தாக்குதலில் பயன்படுத்தியதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதிப்பு
இந்த தாக்குதலில் 10 மாத குழந்தை உள்பட 7 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் சிலர் மிகவும் மோசமான உடல் நிலையுடன் இருப்பதாக Ukrainska Pravda அறிவித்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.